உண்மையில் குளுக்கோஸ்தான் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறதா?



வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் கனூலா என்ற ஒன்றை உங்கள் நாளத்தில் ஏற்றிவிடுவார்கள். அனுமதிக்கப்படும் அனைவருக்கும் இது ஏற்றப்படுவதில்லை ஆனாலும் அனுமதிக்கப்படும் நபருக்கு அண்டிபயோட்டிக் போன்ற மருந்துகளோ வேறுமருந்துகளோ வழங்கும் தேவையிருந்தால் கனுலா அவசியம் போடப்படும். கனுலாபற்றிய விளக்கத்தை முந்தையபதிவில் பதிவிட்டிருந்தேன் வாசிப்பதற்கு இங்கே கிளிக்கவும்.

Cannula வை 2 தொடக்கம் 3 நாட்களுக்கு கையில் தொடர்ச்சியாக வைத்திருக்கமுடியும், இதற்குமேலும் கனுலாவை தொடர்ந்துபயன்படுத்தும்போது கனுலா போடப்பட்ட இடத்தில் எரிச்சல், மருந்துகளை ஏற்றும்போது கடுமையான வலி போன்றவை ஏற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் அவசியம் கனுலாவை அகற்றவேண்டும். கனுலாவை எப்படி போடுவது என்பதுதொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.


கனுலாபோடப்பட்டும் கனுலா பிளாஸ்டரில் கனுலா போடப்பட்ட நாள் பதியப்படும். கனுலாவூடாக மருந்துகளை ஏற்றும்போது வலி ஏற்பட்டாலோ, எரிச்சல் ஏற்பட்டாலோ பிளாஸ்டரில் எழுதப்பட்டிருக்கும் திகதியை அவதானித்து கனுலாவை அகற்றி புதிய கனுலாவைப்போடமுடியும்.

நாம் பயன்படுத்தவேண்டிய பிளாஸ்டர்
நாம் பயன்படுத்தவேண்டிய பிளாஸ்டர்

ஆனால் அரசவைத்தியசாலையில் இருப்பது


நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் கனுலா 3 நாட்களில் out ஆகலாம், அப்படி ஆகும்போது மருந்தை எவளவுதூரம் முயன்றாலும் ஏற்றமுடியாது கையில் (கையில் கனுலா ஏற்றப்பட்டிருந்தால்) வலி ஏற்படும், அதோடு அந்த இடத்தில் வீக்கமும் ஏற்படும். உடனடியாக மருந்தோ, சேலைனோ எது ஏற்றப்படுவதாக இருந்தாலும் அதை நிறுத்தவேண்டும்.இல்லையாயின் அந்தப்பகுதிக்குரிய இரத்த ஓட்டம் தடைப்படவாய்ப்புக்கள் இருப்பதுடன்,  நாளடைவில் இழைய இறப்பு ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளது.


மருந்துகள் ஏற்றப்பயன்படுட்தப்படும் ஊசியின் பகுதிகள்தான் மேலே காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சின் வகைகள் கீழே காட்டப்பட்டுள்ளது.


சிரிஞ்சின் அளவுகள் சிசி CC என்றுதான் அழைக்கப்படுகின்றது. 20 சிசிcc=20mil சிரிஞ், பொதுவாக பயன்பாட்டில் 20சிசி,10சிசி,5சிசி,1 சிசி சிரிஞ்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றின் சைஸ்களுக்கு ஏற்றவாறு சிரிஞ்சில் இருக்கும் ஊசியின் சைஸும் வேறுபடும். இதில் 1 சிசி சிரிஞ்சை இன்சுலின் சிரிஞ் என்று அழைப்பார்கள், காரணம் இது இன்சுலின் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

"ஹொஸ்பிட்டல்ல குளுக்கோஸ் ஏத்தினவை"  நம் சனம் பொதுவாகப்பயன்படுத்தும் வசனம் இதுதான், ஆனால் இதிலும் தவறு இருக்கின்றது. நோயாளிக்கு ஏற்றுவதற்காக என்னென்ன திரவங்கள் வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுகின்றது?


ஒவ்வொன்றும் வேறுவேறுவகை திரவங்கள்தான் அதோடு அவற்றின் லேபிளும் வேறுவேறு நிறங்களில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். பொதுவாக ஏற்றப்படும் திரவம் Normal saline இதை NS என்று சுருக்கமாக அழைப்பார்கள். ஒட்டுமொத்தமாக இந்த திரவங்கள் அனைத்தையும் வகைப்படுத்தமுடியும்.

முதலாவது வகை- Crystalloids VS colloids இப்படி வகைப்படுத்தலாம் 


இரண்டாவது வகை- எமது இரத்தத்தின் பாகுமைத்தன்மை, அடர்த்தி என்பவற்றிற்ற்கு ஏற்ப கீழே காட்டப்பட்டிருப்பதுபோல் திரவங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.


"Antibiotic ஆல் ஏற்பட்ட அலேர்ஜியால் பேராதனையில் பெண் ஒருவர் மரணம்"
இவற்றை எப்படித்தவிர்க்கலாம்? உங்களுக்கு ஏதாவது ஒரு உணவுக்கோ, மருந்துக்கோ ஒவ்வாமை இருப்பின் என்ன செய்யவேண்டும்?



அடுத்த பதிவில் சந்திப்போம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்